
சென்னை,
கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். 120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதங்களில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்துக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலை தாண்டியுள்ளது. அதேநேரத்தில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் டிக்கெட்கள் காலியாக இருக்கின்றது.