திருச்சி, மார்ச் 10: திருச்சியில் கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயிலால் மக்கள் பகல்நேரங்களில் வீட்டில் முடங்கினர். வெளியே வந்தவர்கள் அனைவரும் கையில் குடையுடனும், கண்ணாடி அணிந்த படியுமே காணப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கியது முதலே வெயில் கொளுத்துகிறது. வழக்கமாக திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாத தொடகத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். தற்போது மார்ச் மாதம் தொடங்கியது முதலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது, திருச்சி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோரே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலநிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, மரங்கள் அதிகம் வெட்டப்படுவது போன்ற பல காரணங்கள் பருவநிலை மாற்றத்திற்கான காரணங்களாக உள்ளது.
இருப்பினும் சீராக ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்தாண்டும் ஏப்ரல், மே மாதம் நெருங்கும் முன்னறே வெளியில் வாட்டி வதைப்பதாக திருச்சி வாசகிள் கருத்து தெரிவிக்கின்றனர். மார்ச் மாதமே இந்நிலையென்றால் வரவிருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் திருச்சி வாசிகள் விழிபிதுங்கி வருகின்றனர். கடந்த வாரங்களில் திருச்சி வாசிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, கையுரை, தொப்பி, கண்ணாடி ஆகியவை அணிந்து வெளியே வருவதை காணமுடிகிறது.
வானிலை ஆய்வு மைய தகவலை பொருத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் எனவே கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து திருச்சி முழுவதும் ஆங்காங்கே அதிகமான ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், இளநீர் கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் தினசரி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இளநீருக்கு கிராக்கி
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அனைத்து ரக பழ ஜுஸ்களின் விலையும் அதிகரித்துள்ளது, அதிலும் உச்சத்திலும், உச்சமாக உடல் உஸ்னத்தை குறைக்கவும், மருத்துவ குணமும் கொண்ட இளநீர் 1 சுமார் ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் விசாரித்தபோது, வெயிலின் தாக்கத்திற்கு பயந்து மக்கள் தற்போதிலிருந்தே ஏ.சி வாங்க துவங்கிவிட்டதாகவும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு முக்கூட்டியே மக்கள் ஏ.சி. ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களை வாங்க துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
The post கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீட்டில் முடங்கினர்: திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரிப்பு appeared first on Dinakaran.