கோடியக்கரையில் ஆமை குஞ்சு பொறிப்பகத்திலிருந்து 189 ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

2 days ago 4

வேதாரண்யம்: கோடியக்கரையில் ஆமை குஞ்சு பொறிப்பகத்திலிருந்து 189 ரெட்லி ஆமை குஞ்சுகள் நேற்று கடலில் விடப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளுக்கு வந்து மணல் பரப்பில் குழி தோண்டி ஆலிவ் ரெட்லி ஆமைகள் தங்களது முட்டைகளை இட்டு செல்லும். விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் திருச்சி தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, நாகை வன உயிரின காப்பாளர் பார்கவ தேஜாஆகியோரின் ஆலோசனையின்பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் மற்றும் வனவர் இளஞ்செழியன் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்து கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுதுறை பகுதிகளில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் தேதி வாரியாக குழி தோண்டி புதைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடியக்கரை, ஆறுகாட்டு துறையில் இருந்து 165 ஆமைகள் விட்ட 11,757 முட்டைகளை, எடுத்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கபட்டுள்ளது. ஆமைக்குஞ்சுகள் பொறிப்பகத்தில் இருந்து 45 முதல் 50 நாட்களில் வெளிவரும் ஆமை குஞ்சுகள் தொடர்ந்து கடலில் விடபடுகிறது. நடப்பாண்டில் 21 வது முறையாக வெளிவந்த 189 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை பாதுகாப்புடன் எடுத்து மீண்டும் கடலில் விடப்பட்டது.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஆமை முட்டைகளில் இந்த ஆண்டு தான் அதிகபட்சமாக 11,757 ஆமை முட்டைகள் சேகரிக்கபட்டுள்ளது. இதுவரை 165 ஆமைகளில் இருந்து எடுக்கப்பட்ட முட்டைகளில் 21ஆமை முட்டைகள் குஞ்சு பொறித்து கடலில் விடப்பட்டன. இதில் மீதமுள்ள 144 ஆமை முட்டைகள் குஞ்சு பொறித்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என்றார்.

The post கோடியக்கரையில் ஆமை குஞ்சு பொறிப்பகத்திலிருந்து 189 ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article