சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமாக (4 -வது வழித்தடம்) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது. பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, மெட்ரோ ரயில் நிலையப் பணி ஆகியபணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.