நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கையும், எஸ்டேட் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவம் குறித்த தகவல் எப்படி கிடைத்தது, எவ்வளவு மேரம் கழித்து தகவல் கிடைத்தது, யார் கூறினார்கள், சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு எவ்வாறு இருந்தது, மாயமான பொருட்கள் என்ன, எஸ்டேட் வளாகத்துக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார், வேலை செய்தவர்களின் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை அங்கிருந்து சிபிசிஐடி போலீஸார் அனுப்பிவைத்தனர்.