*பொதுமக்கள் வலியுறுத்தல்
கொள்ளிடம் : கொள்ளிடம் பஸ் நிலையத்தில் உடைந்த இருக்கைகளுக்கு பதிலாக புதிய இருக்கைகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பஸ் நிலைய கட்டிடம் உள்ளது. சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் சாலையையொட்டி அமைந்துள்ளது.
சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் இங்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்து பல ஊர்களுக்கு சென்று வருகின்றனர். கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள சிவலோக தியாகராஜ சுவாமி கோயில், மாதிரவேளூர் மாதலீஸ்வரர் கோயில், வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயில், மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுக்கும் கொள்ளிடத்தில் இருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலோகத்தினாலான இருக்கைகள் மிகவும் பழமை வாய்ந்ததால் உடைந்துள்ளன. இந்த உடைந்த இருக்கைகளில் பயணிகள் அமரும் போது அவர்களின் உடை கிழிந்து போவதோடு மட்டுமல்லாமல் உடல்களிலும் காயம் ஏற்படுகிறது இதனால் இங்குள்ள இருக்கைகளில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆண் பெண் முதியோர் இங்கே அமர்ந்து சிறிது நேரம் கூட ஓய்வெடுக்க முடியாத நிலையில் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே இங்குள்ள பழமையான இருக்கைகளை அகற்றிவிட்டு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கொள்ளிடம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.