கொள்கை கருவூலமாக விளங்கும் பேராசிரிய பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்: க.அன்பழகன் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

4 weeks ago 7

சென்னை: கொள்கைக் கருவூலமாக விளங்கும் பேராசிரிய பெருந்தகையின் புகழைப் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கலைஞரின் உடன்பிறவா சகோதரரும், 75 ஆண்டு காலம் உயிர் நண்பராக இருந்தவரும், தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதியும், திமுக அரசின் அமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் நிதி, கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவரும், 2001-06ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும், 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான பேராசிரியர் க.அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், “கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர்! “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரிய பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

The post கொள்கை கருவூலமாக விளங்கும் பேராசிரிய பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்: க.அன்பழகன் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article