கொளக்காநத்தத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

2 months ago 11

 

பாடாலூர், அக்.18: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை ஒன்றிய குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடிகளில் முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 2 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடையும் புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்ளவும், மேலும் இறப்பு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் விவரங்களான பெயர், உறவினர் பெயர், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்கு அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். இதே போல் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள அலுவலர்களிடம் பணி குறித்து கேட்டறிந்தார்.

The post கொளக்காநத்தத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article