கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி...டெல்லி கேப்டன் கூறியது என்ன ?

2 weeks ago 4

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி விளையாடியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 190 ரன்களை எடுத்தது. சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இதனால், கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது,

நாங்கள் 15-20 ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்தோம். சில விக்கெட்டுகளையும் எளிதான முறையில் இழந்தோம். பவர்பிளேவுக்குப் பிறகு அவர்களை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பதுதான் நேர்மறையானது, சில பேட்டர்கள் தோல்வியடைந்தாலும், நாங்கள் 2-3 பேட்ஸ்மேன்கள் பங்களித்து அதை மிக நெருக்கமாக கொண்டு சென்றோம் .. விப்ராஜ் பேட்டிங் செய்தபோது நம்பிக்கை இருந்தது,

டைவ் செய்ததால் எனக்கு காயம் ஏற்பட்டது , ஆனால் நல்ல விஷயம் அடுத்த போட்டிக்கு 3-4 நாட்கள் இடைவெளி உள்ளது, நான் குணமடைய முடியும் என்று நம்புகிறேன்.என தெரிவித்தார் . 

Read Entire Article