கொரோனா குமார் படம் விவகாரம் பட நிறுவனம்: நடிகர் சிம்பு பிரச்னை முடிவு: டெபாசிட் பணத்தை திரும்ப தர ஐகோர்ட் உத்தரவு

4 weeks ago 5

சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படத்தில் நடிக்க சிம்புவுக்கு சம்பளமாக ரூ.9 கோடியே 50 லட்சம் பேசப்பட்டது. இதில் 4 கோடியே 50 லட்சம் முன்பணமாக 2021ல் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ”கொரோனா குமார்” படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க கோரி வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிம்பு தரப்பில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. பின்னர், நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவன பிரச்னைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post கொரோனா குமார் படம் விவகாரம் பட நிறுவனம்: நடிகர் சிம்பு பிரச்னை முடிவு: டெபாசிட் பணத்தை திரும்ப தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article