திருத்துறைப்பூண்டி, மார்ச் 29: திருவாரூர் மாவட்டம், கொருக்கை அரசு கால்நடை பண்ணையில்பராமரிப்பு மருத்துவ பணி இயக்குனர் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை பண்ணை இயங்கி வருகிறது. இதில் சுமார் 520 பாரம்பரிய உம்ளச்சேரி இன பசுமாடுகள், காளைமாடுகள், கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கால்நடை பராமரிப்பு மருத்துவ பணிகள் இயக்குனர் கண்ணள் கால்நடை பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாரம்பரிய உம்ளச்சேரி இன கால்நடைகளை பார்வையிட்டும் பண்னை வளர்ச்சி அடைவதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர்கள் டாக்டர் ராமலிங்கம், விஜயகுமார், உதவி இயக்குனர்கள் ஆறுமுகம், ஈஸ்வரன், கால்நடை மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, திவ்யா, பூவரசு சந்திரன்,பண்ணை மேலாளர் யோகா, மற்றும் பண்ணை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
The post கொருக்கை அரசு கால்நடை பண்ணையில் பராமரிப்பு மருத்துவ பணி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.