கொடிகாத்த குமரன் பிறந்தநாள் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

3 months ago 25

 

ஈரோடு,அக்.5: சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொடி காத்த குமரன் பிறந்த இடமான சென்னிமலையில் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னிமலையில் கொடிகாத்த குமரனின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கொடிகாத்த குமரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், கொடிகாத்த குமரன் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கலைமாமணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கொடிகாத்த குமரன் பிறந்தநாள் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article