கைதிகளுக்கு டிக்கெட் வாங்குவதில் சேலம் போலீஸ், பேருந்து நடத்துநர் இடையே வாக்குவாதம்

4 months ago 15
அரசு பேருந்தில் ஏறிய சேலம் மாவட்ட போலீசார் விசாரணை கைதிகளுக்கு டிக்கெட் வாங்கும் விவகாரத்தில் தகராறு செய்து மிரட்டியதாக கூறி கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து என்பதால் முழு பயண சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என்று போலீசாரிடம் நடத்துநர் கூறி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார் கைதிகளை சத்தியமங்கலம் வரை அழைத்து சென்றதாக ஆகிவிடும் என கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க நடத்துநர் மறுக்கவே, இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read Entire Article