நித்திரவிளை, ஜன. 25: நித்திரவிளை சிறப்பு எஸ்.ஐ. சௌந்தர் மற்றும் போலீசார் நேற்று காலை விரிவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே, பக்கவாட்டு மற்றும் பின்பகுதி முழுவதும் மூடியவாறு தமிழக பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோ வந்தது. சந்தேகமடைந்த சிறப்பு எஸ்.ஐ. ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 கேன்களில் 250 லிட்டர் இருந்துள்ளது. இதையடுத்து ஆட்டோவையும், மண்ணெண்ணெய்யையும், ஆட்டோவை ஓட்டி வந்த நம்பாளி துண்டுவிளை பகுதியை சேர்ந்த வினு(21) என்பவரையும் நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
The post கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்திய ஆட்டோ சிக்கியது appeared first on Dinakaran.