![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/31/36761697-arrest.webp)
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த 27 வங்காளதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூர் பகுதியில் வங்காளதேசத்தை சோ்ந்தகள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இந்த தகவலின்பேரில் அப்பகுதியில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப்படையினர் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் வங்காளதேசத்தை சேர்ந்த 27 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 34 வங்காளதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.