புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள் முன்பாகவே வரும் 27ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் தற்போது 4 நாள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கேரளாவில் நடப்பாண்டில் 4 நாள் முன்கூட்டியே வரும் 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். அவ்வாறு எதிர்பார்த்தபடி 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கினால், கடந்த 2009ம் ஆண்டு மே 23ம் தேதி பருவமழை தொடங்கியதற்கு பின்பு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது இந்த முறையாகத்தான் இருக்கும். தென்மாநிலத்தில் கடந்தாண்டு மே 30ம் தேதி பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கும் தேதிக்கும், பரவலாக நாடு முழுவதும் பெய்யும் மொத்த மழை பொழிவுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் 4 நாள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்தியா வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.