கேரளா: ரெயிலில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி - இளைஞர் கைது

4 months ago 31

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர், பெங்களூரு செல்லும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரெயில் காசர்கோடு மாவட்டம் நிலேஸ்வரம் பகுதி அருகே வந்தபோது, ரெயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், 28 வயதான இப்ராகிம் பாதுஷா என்ற நபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் இப்ராகிம் பாதுஷாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Read Entire Article