கேரள லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி விவரத்தை வெளியிட மறுப்பு

3 hours ago 1

திருவனந்தபுரம்,

கேரள அரசு வாரத்தின் அனைத்து நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தி வருகிறது. மேலும், ஓணம், விஷூ, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பம்பர் லாட்டரிகளையும் விற்பனை செய்து வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இந்த பம்பர் சீட்டு ஒன்றின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 10 சீரியல்களில் 50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் கேரள நிதித்துறை மந்திரி பாலகோபால் தலைமையில் நடைபெற்றது.இந்த குலுக்கலில் முதல்பரிசான ரூ.20 கோடி கண்ணூர் மாவட்டத்தில் விற்ற சீட்டுக்கு (எக்ஸ் டி 387132) என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. அதாவது கண்ணூரில் செயல்பட்டு வரும் முத்து லாட்டரி விற்பனை நிலையத்தில் சீட்டு வாங்கிய இரிட்டி என்ற இடத்தில் விற்பனையானது தெரியவந்தது.

பரிசு யாருக்கு கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், சத்யன் என்பவர் நேற்று கண்ணூர் மாவட்டம் இரிட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு மிகவும் ரகசியமாக வந்து பரிசு பெற்ற லாட்டரியை டெபாசிட் செய்துவிட்டு சென்றார். தன்னுடைய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரை பற்றி விவரங்களை வெளியிட வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

Read Entire Article