நன்றி குங்குமம் டாக்டர்
கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
தோல்: கேரட் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: கேரட்டில் பொட்டாசியம் உள்ளது, இது இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களை குறைக்கிறது. மேலும், கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் இதயத் தசைகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: கேரட் ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைகிறது, இதனால் காய்ச்சல் மற்றும் பிற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
புற்றுநோய் தடுப்பு: கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கல்லீரல்: கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் கேரட் ஜூசுக்கு உண்டு. மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு பாதித்த நோயாளிகள் கேரட் ஜூஸ் அருந்துவதன் மூலம் கல்லீரலை பலப்படுத்தலாம். தினமும் கேரட் ஜூஸ் அருந்தி வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து சிறுகுடலில் வாழும் நல்ல பாக்டீரியா காலனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் காரணமாக வாயுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்கப்படும். ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிரகிக்கப்படும்.
கேரட் ஜூஸ் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
இளசான கேரட் – 200 கிராம்.
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புதினா இலைகள் – 3
எலுமிச்சைச்சாறு – அரை தேக்கரண்டி
தேன் அல்லது சர்க்கரை – தேவைக்கு ஏற்ப
இஞ்சி – 1 சிறிய துண்டு.
முதலில் கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித் தழையையும் புதினாவையும் தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட் துண்டுகள் இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பின்னர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து வடிகட்டிக் கொள்ளவும். இறுதியாக அரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தவும்.
தொகுப்பு: ரிஷி
The post கேரட் ஜூஸின் நன்மைகள்! appeared first on Dinakaran.