'கேம் சேஞ்சர்' படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த புஷ்பா இயக்குனர்

4 hours ago 3

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸில் கேம் சேஞ்சர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புஷ்பா இயக்குனர் சுகுமார் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

'நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். 'கேம் சேஞ்சர்' படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்தேன். நான் அதற்கு முதல் விமர்சனம் கொடுக்க விரும்புகிறேன். முதல் பாதி, அருமை. இடைவேளை, பிளாக்பஸ்டர். என்னை நம்புங்கள். இரண்டாம் பாதியில், பிளாஷ்பேக் காட்சி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது' என்றார்.

Read Entire Article