'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் புரோமோ - வைரல்

5 months ago 17

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளநிலையில், நேற்று அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டது. இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

Read Entire Article