புதுடெல்லி,
இந்துக்களின் நான்கு புனித யாத்திரை தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய ஆன்மிக தலங்களுக்கு செல்வது 'சார் தம்' எனப்படும். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே இந்த கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசிக்க முடியும். குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்படும் என்பதால் அந்த பனிலிங்க குகைக்கோவில்கள் மூடப்படும். மேலும் பக்தர்கள் யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். உத்தரகாண்ட் அருகே உள்ள இமயமலை தொடர்களில் இந்த பனிலிங்க தலங்களை தரிசிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு வருகிற மே மாதம் 4-ந் தேதி காலை 6 மணியில் இருந்து தொடங்க உள்ளதாக தேவஸ்தான கமிட்டி தகவல் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் பனி லிங்கங்களை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.