சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நடித்த டாகு மகாராஜ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்திய அரசு பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. இதனால் இவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், தனக்கு பிடித்த மூன்று நடிகைகளைப் பற்றி பாலகிருஷ்ணா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாலையாவின் சகோதரி அவருக்கு பிடித்த மூன்று ஹீரோயின்களைப் பற்றி அவரிடம் கேட்கிறார், அதற்கு அவர், விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணா மற்றும் சிம்ரன் ஆகியோரை கூறுகிறார்.
பாலகிருஷ்ணா இந்த நடிகைகளுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.