இந்திய அணியில் ஆக்ரோஷத்தை கொண்டு வந்த முதல் கேப்டன் அவர்தான் - ராஜீவ் சுக்லா

3 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. ஆக்ரோஷம் மிகுந்த கேப்டன்களில் இவருக்கு தனி இடம் உண்டு. அதற்கு சிறந்த உதாரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியவுடன் பிளிண்டாபுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தனது ஜெர்சியை கழற்றி சுற்றி கொண்டாடியது அனைவராலும் மறக்க முடியாது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனை அந்த அணியின் பிளிண்டாப் ஜெர்சியை கழற்றி சுழற்றி கொண்டாடினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்குலி இங்கிலாந்தில் அவ்வாறு செய்திருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும்போது மொத்த அணியும் சேர்ந்து சட்டையை கழற்றி சுழற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கங்குலி சொன்னதாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்பது போல் இருந்தோம். அப்போது எனது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். 325 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்தபோது பதற்றத்துடன் கங்குலியிடம் ஸ்கோர் பற்றி கேட்டேன். அதற்கு சார் முதலில் எங்களை களத்திற்கு சென்று விளையாட விடுங்கள் என்று சொன்ன கங்குலி முழு தன்னம்பிக்கையுடன் இருந்தார்.

இறுதியில் வெற்றி தருணம் வந்தபோது மொத்த அணியும் சட்டையை கழற்றி சுழற்றி கொண்டாடுவோம் என்று கங்குலி சொன்னார். ஏனெனில் மும்பையில் பிளின்டாப் அவ்வாறு கொண்டாடினார். ஆனால் இது ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் மொத்த அணியும் அவ்வாறு செய்வது நன்றாக இருக்காது. எனவே அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சச்சின் என்னிடம் சொன்னார். அதனால் நீங்கள் விரும்பினால் அவ்வாறு செய்து கொள்ளுங்கள் என்று கங்குலியிடம் சொன்னேன். அதை கங்குலி செய்தது வரலாற்று புகைப்படமாக மாறியது. அவர்தான் இந்திய அணியில் ஆக்ரோஷத்தைக் கொண்டு வந்த முதல் கேப்டன்" என்று கூறினார்

Read Entire Article