
திருமலை,
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகாரம் பெற்ற ஓட்டல் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்று ஓட்டல் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவதால், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையில் தரமான, சுத்தமான உணவுப் பொருட்களை லாப நோக்கமின்றி வழங்க வேண்டும். திருமலையில் ஜனதா கேண்டீன்கள் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. ஜனதா கேண்டீன்கள் நிர்வாகத்தில் தரநிலைகள், சுத்தம் மிகவும் அவசியம். மேலும் நியமிக்கப்பட்ட விலையில் உணவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.