'கே.ஜி.எப் 3' மற்றும் 'ராமாயணம்' குறித்து அப்டேட் கொடுத்த யாஷ்

3 months ago 14

மும்பை,

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது படமான டாக்சிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படும்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் யாஷ் 'கே.ஜி.எப் 3' மற்றும் 'ராமாயணம்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ராமாயணத்தில், 'வேறு கேரக்டரில் நடிப்பீர்களா?' என்று என்னிடம் கேட்டிருந்தால், இல்லை என்றிருப்பேன். ராவணன் மிகவும் கவர்ச்சிகரமான கதாபாத்திரம். வேறு எந்த காரணத்திற்காகவும் நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். ஒரு நடிகனாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

கே.ஜி.எப் 3 நிச்சயம் வரும், அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆனால் நான் இப்போது டாக்சிக் மற்றும் ராமாயணம் ஆகிய இரண்டு திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்' என்றார்.

Read Entire Article