கெய்க்வாட்டிற்கு ஏன் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை..? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில்

6 months ago 18

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏன் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "ருதுராஜ் கெய்க்வாட் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாகத்தான் செயல்படுகிறார். இருந்தாலும் அவருக்கு முன்னதாக அணியில் இடம் பிடித்த பலவீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே வரிசையாக ஒவ்வொருவருக்கும் அணி நிர்வாகம் தேவைப்படும்போது வாய்ப்பு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் இனிவரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரை நிச்சயம் அவர் மூன்று வகையான அணிலும் இடம் பிடிக்கக்கூடிய தகுதியான வீரர்தான்" என்று கூறினார்.

Read Entire Article