கெயில் நிறுவனத்தில் 261 சீனியர் இன்ஜினியர், ஆபீசர்

14 hours ago 2

I. Senior Engineer

i) Renewable Energy: 6 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/கெமிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் பவர்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/ புரடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., படிப்பில் தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ii) Boiler Operators: 3 இடங்கள். தகுதி: கெமிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ., படிப்பு தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
iii) Mechanical: 30 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/புரொடக்சன்/புரொடக்சன் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ. படிப்பு தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
iv) Electrical: 6 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., படிப்பும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
v) Instrumentation: 1 இடம். தகுதி: இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/இன்ஸ்ட்ருமென்டேஷன் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.
vi) Chemical: 36 இடங்கள். தகுதி: பெட்ரோ கெமிக்கல்/கெமிக்கல் டெக்னாலஜி/டெக்னாலஜி மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி/ கெமிக்கல் டெக்னாலஜி மற்றும் பாலிமர் சயின்ஸ் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.
vii) GAILTEL (TC/TM): 5 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/டெலி கம்யூனிகேசன்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரிவில் பி.இ., படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
viii) Civil: 11 இடங்கள். தகுதி: சிவில் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான

வயது: 28க்குள். சம்பளம்: ரூ.60,000-1,80,000.

II. Senior Officer.

i) Fire & Safety: 20 இடங்கள். தகுதி: Fire/Fire & Safety பிரிவில் பி.இ., படிப்பு தேர்ச்சியுடன் இன்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) C & P: 22 இடங்கள். தகுதி: கெமிக்கல்/மெக்கானிக்கல்/புரொடக்‌ஷன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ்/மெட்டலர்ஜி/சிவில்/டெலிகம்யூனிகேசன் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
iii) Marketing: 22 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
iv) Finance & Accounts: 36 இடங்கள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் வணிக நிர்வாகத்தில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) Human Resources: 23 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் இன்டஸ்ட்ரியல் மற்றும் மேனேஜ்மென்ட்/ஹூயூமன் ரிசோர்ஸஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
vi) Law: 2 இடங்கள். தகுதி: சட்டப் படிப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
vii) Medical Services: 1 இடம். தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
viii) Corporate & Communication: 4 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்யூனிகேசன்/ அட்வர்டைசிங் மற்றும் கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட்/பப்ளிக் ரிலேஷன் பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 28க்குள். மெடிக்கல் சர்வீஸ் பணிக்கு 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.60,000-1,80,000.

III. Officer

i) Laboratory: 16 இடங்கள். வயது: 32க்குள்.
சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: வேதியியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Security: 4 இடங்கள். வயது: 45க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டியில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
iii) Official Language: 13 இடங்கள். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: இந்தி பாடத்தில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு பெட் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
http://gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2024.

The post கெயில் நிறுவனத்தில் 261 சீனியர் இன்ஜினியர், ஆபீசர் appeared first on Dinakaran.

Read Entire Article