கூல்டிரிங்சில் மது கலந்து கொடுத்து பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது

3 months ago 12

சூலூர்: கோவை அருகே கூல்டிரிங்சில் மது கலந்துகொடுத்து பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது நிரம்பிய மாணவி கடந்த சில தினங்களாக உடல் சோர்வுடன் படிப்பில் நாட்டம் இல்லாமல் காணப்பட்டார். இதனால் கவலையடைந்த பெற்றோர் அந்த மாணவியிடம் ஏன் இவ்வாறு இருக்கிறாய்? என கேட்டபோது, பாப்பம்பட்டியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

அஸ்வினுடன் மாணவி நட்பாக பழகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நட்பு முறையில் தனது வீட்டிற்கு வருமாறு மாணவியை அஸ்வின் அழைத்துள்ளார். மாணவி அங்கு சென்றபோது அஸ்வின் வீட்டில் யாரும் இல்லை. அப்போது மாணவிக்கு அஸ்வின் கூல்டிரிங்ஸ் குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயங்கினார். அதன் பின்னர் மாணவியை அஸ்வின் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

மகள் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அஸ்வினை அழைத்து விசாரித்தபோது வீட்டிற்கு வந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, மயக்கம் அடைந்தபோது அவரை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போக்சோ வழக்குப்பதிந்து அஸ்வினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post கூல்டிரிங்சில் மது கலந்து கொடுத்து பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article