கூத்தாநல்லூர் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கம்: கலெக்டர் நேரில் ஆய்வு

2 weeks ago 2

மன்னார்குடி, ஏப். 26: கூத்தாநல்லூர் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு17வது வார்டில் உடனடியாக சுடுகாடு சாலை அமைக்க உத்தரவுமக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு அவற்றிக்கு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் சார்பில் கூத்தாநல்லூரில் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடந்தது. இரண்டாம் தினமான நேற்று கூத்தநல்லூர் நகரத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், நகராட்சி சார்பில் மருத்துவமனை வளாகத்தில் தொகுதி எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முய ற்சி காரணமாக 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ,5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு தாலுகா மருத்துவமனை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் வண்டிப்பேட்டை பகுதியில் ரூ 90 லட்சம் மதிப்பீட்டிலும், ரம்ஜான் மார்க்கெட் பகுதியில் ரூ 70 லட்சம் மதிப்பீட்டிலும், வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை மாவட்ட கலெக் டர் மோகனச் சந்திரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டி ற்கு வரும் வகையில்விரைந்து வரும் வகையில் மேற்கொள்ளுமாறு அறி வுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, கூத்தநல்லூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி ஆகியோர் முன்னிலையில் நடந்த ஆய்வுக் கூட்ட்டத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களை விரைந்து பரிசீலித்து அவற்றின் மீது உடனு க்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, நகராட்சி பொறி யாளர் பிரதான் பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்

The post கூத்தாநல்லூர் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கம்: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article