கூட்டுறவுத்துறை சார்பில் 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

4 weeks ago 4

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் மூலம் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொங்கல் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: முதல்வர் அறிவுரைப்படி பொங்கல் தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பச்சரிசி, வெல்லம், உலர் திராட்சை உள்ளிட்ட 7 வகையான பொருட்கள் கொண்ட தொகுப்பு ஒன்று ரூ. 199க்கும், கூட்டுறவு சிறப்பு தொகுப்பு எனும் 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என ரூ. 999க்கும் குறைந்த விலையில் தரமான பொருட்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) காயத்ரி கிருஷ்ணன், உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவுத்துறை சார்பில் 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article