கூட்டுறவு சங்கங்களில் 2000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 months ago 20

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்

அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும். நவ.7 மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னையில் 33 விற்பனையாளர்கள், 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 58 விற்பனையாளர்கள், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு சங்கங்களில் 2000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article