ஈரோடு, மார்ச் 12: ஈரோட்டில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம் 14ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர்கள், ஓய்வு பெற்றோருக்கான குறைதீர் நாள் கூட்டம் வருகிற 14ம் தேதி (வெள்ளி) காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் மண்டல இணை பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ஆகியோர் தலைமை வகித்து, குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர். ஈரோடு மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் பணியின்போது அல்லது வேறு வகையில் ஏற்பட்ட குறைகளை மனுக்களாக அளிக்கலாம். அந்த குறைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காணலாம். இத்தகவலை, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார்.
The post கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.