இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

6 hours ago 3

சென்னை: தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம் என்று சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது; 13 போற்றி புத்தகங்கள் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னை தமிழ் அர்ச்சனை செய்யக்கூடியவரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை காட்சிப் படுத்தியுள்ளோம். யார் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பினாலும் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம். அதே நேரம் சமஸ்கிருதம் மொழி வழிபாட்டுக்கும் நாங்கள் எந்த தடையும் செய்யவில்லை. தேவாரம் என்றாலும், திருவாசகம் என்றாலும் அர்ச்சனை என்றாலும் தமிழ் தான்.

நங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை திணிக்கும் பொழுது அதற்க்கு எதிர்த்து நிற்கிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அது தான் நம் அரசு. ஆகவே தமிழும் அர்ச்சனையில் இருக்கும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை. இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள். காலை சிற்றுண்டியால் பலர் பலன் பெறுகின்றனர். மக்கள் பணி எங்களை உற்சாகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

 

The post இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article