தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி

6 hours ago 3

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு (DMLT) (2024-25) பயிற்சிக்கு விண்ணப்பிக்க (+2 அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர்(பொ) தொ.நோ.ம.மனை.எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் 12.03.2025 முதல் 21.03.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21:03.2025 மாலை 5.00 மணிக்குள் மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்துசேறுமாறு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article