சத்தியமங்கலம்,ஜூன்23: பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பாளையம்,உத்தண்டியூர், முடுக்கன்துறை, புங்கார், பனையம்பள்ளி, பெரிய கள்ளிப்பட்டி, மாதம்பாளையம், விண்ணப்பள்ளி, நல்லூர், நொச்சிக்குட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் வாய்க்கால் பாலம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீய்ச்சியடித்தபடி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகிறது.
இதன் காரணமாக கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது appeared first on Dinakaran.