திருப்போரூர்: மறுமலர்ச்சி திமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை திருப்போரூரில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கெங்காதுரை தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சம்சுதீன் வரவேற்றார். கூட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மதிமுக ெசயலாளர் லோகநாதன், மாநில தொழிற்சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் சங்கொலி பத்திரிகைக்கு சந்தா செலுத்துதல், செம்டம்பர் மாதம் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் கலந்து கொள்ளுதல், 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளை திமுகவுடன் இணைந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலா, மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், தேசிங்கு, தனபால், மாவட்ட பொருளாளர் குமரன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் சாஞ்சி சேகர், சந்திரசேகர், ரவி, ராஜா, உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில். திருப்போரூர் பேரூர் கழகச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
The post மதிமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.