காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் திமுக சார்பில், ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கை முகாமினை எழிலரசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ எனும் கருத்தை முன்னிறுத்தி, உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நேற்று முதல் தமிழகமெங்கும் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதி வைகுண்ட பெருமாள் கோயில் தெரு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ‘‘ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் துங்கியது. “ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கை முகாமினை, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்து, திமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சியின் சாதணைகளை எடுத்துக்கூறி உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையெழுத்து வாங்கப்பட்டும், வீட்டின் முன்பு ‘‘ஓரணியில் தமிழ்நாடு” ஸ்டிக்கர் ஒட்டி உறுப்பினராக சேர்ந்தவர்களை திமுகவினர் வரவேற்று மகிழ்ந்தனர்.இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் திலகர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், மாமன்ற உறுப்பினர் சித்ரா ராமச்சந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார், திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் 7வது வார்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்: எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.