விழுப்புரம்: திண்டிவனத்தில் நேற்று இரவு நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு, அடுத்தாண்டு தேர்தல் வர உள்ள நிலையில், அரசு மூலமாக ‘உங்களுடன் முதல்வர்’ என மீண்டும் ஏமாற்றுகிறார்.
தேர்தல் வந்தால்தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் பெரும்பான்மையை நிருபித்த போது, நம்மிடம் இருந்த எட்டப்பர்கள் துணையுடன் பேரவை தலைவர் நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர். மேலும் சட்டையை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் வெளியே சென்றார். 2026-ல் மற்றொரு முறை சட்டையை கிழித்து கொள்ளும் நிலை வரும்.