கூட்ட நெரிசல்: மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

2 months ago 14

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கர்ஜத் நோக்கி நேற்று இரவு மின்சார ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் கர்ஜத்தை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ருதுஜா (வயது 28) பயணித்தார்.

கூட்ட நெரிசல் காரணமாக ருதுஜா ரெயிலின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். புறப்பட்ட நிலையில் கூட்ட நெரிசலால் ரெயில் இருந்து ருதுஜா திடீரென கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளம்பெண் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article