கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை: போலீசார் தகவல்

1 month ago 4

சென்னை: கோயம்புத்தூர் சிறுமி உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை. உடல் உபாதையே காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவையை சேர்ந்த எலினா லாரேட் (15). குவாலியரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட பின் கடந்த 17ம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்படவே அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் எலினா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரயிலில் வரும்போது சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், எலினா பிறக்கும்போதே ‘டயா பார்ம்’ என்ற மெல்லிய தசைப் பகுதி ஒன்று வயிற்றில் இருந்ததாகவும் இது எகிறி குதித்து விளையாடும்போது தசைப்பகுதி மேல் நோக்கி நகர்ந்து கல்லீரல் மற்றும் இதயத்தை அடைக்கும் நிலைக்கு சென்றுள்ளதால் எலினா உயிரிழந்துள்ளதாகவும் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் உணவால் உயிரிழக்க வாய்ப்பில்லை எனவும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை: போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article