கூடுதல் வட்டி வாங்கினால் நடவடிக்கை

3 months ago 20

சிவகங்கை, அக்.10: சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் வட்டி வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச்சட்டம் அமலில் உள்ளது. இதன்படி நியாயத்திற்கு புறம்பாக வட்டி வாங்குவோர் 1957 தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டம் பிரிவு 7ன் கீழ் அரசு நிர்ணயிக்கும் வட்டியை தவிர கூடுதலாக வட்டி பெறக்கூடாது. வரம்பு மிகுந்த வட்டி என்பது நேரவட்டி, நாள்வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி ஆகியன ஆகும். இதனடிப்படையில் அதிகப்படியாக வட்டி பெற்றது தெரியவந்தால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. எனவே கந்து வட்டியினால் பாதிக்கப்பட்டோர் தங்களது புகார்களை கலெக்டர், எஸ்பி, தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடுதல் வட்டி வாங்கினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article