கூடலூர், ஜன. 26: கூடலூரை அடுத்த செலுக்காடி பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானை, சிறுத்தை போன்றவை நடமாடி வருகின்றன. வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் அடிக்கடி வனத்துறைக்கு தகவல் அளித்தும் புகார்கள் அளித்தும் வருகின்றனர். இப்பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் கோயா என்பவரது வீட்டின் முன்பாக சாலையில் சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் இரவு நடமாடி உள்ளது. வீட்டின் முன் பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து வந்த சிறுத்தை சிறிது நேரம் அப்பகுதியில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று மறைந்துள்ளது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டி இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post கூடலூர் அருகே செலுக்காடி பகுதியில் வீட்டின் அருகே சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.