கூடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மோசமான சாலையை சீரமைக்க கோரிக்கை

4 months ago 10

 

கூடலூர், ஜன. 8: கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் பிரதான சாலையில் இருந்து மருத்துவமனைக்குள் செல்லும் சாலையின் தரம் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவசர நோயாளிகளை கொண்டு வரும் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை வார்டுகளுக்கு எடுத்து செல்லும் சக்கர நாற்காலிகள் போன்றவை இந்த சாலையில் இயக்கப்படுகின்றன. அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட நோயாளிகளை வார்டுகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்டெர்ச்சர்களில் இந்த சாலையில் எடுத்து செல்லும் போது அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

மருத்துவமனையை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கூடலூர் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள இந்த சாலையை பராமரிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தும் இதுவரை சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் நலன் கருதி இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post கூடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மோசமான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article