கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியர்களுக்கு நேர்காணல் அழைப்பு

3 weeks ago 5

 

கூடலூர், டிச.28: கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலம், வணிகவியல், இளங்கலை சமூகப் பணி இடங்களுக்கான தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் வரும் 08-1-2025 அன்று காலை 11.30 மணிக்கு கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கல்வித் தகுதி: ஆங்கிலம், வணிகவியல், சமூகப் பணிகளுக்கு பிஜி/எம்.பில்., ஆய்வக உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. (தாவரவியல்) ஆகும். உரிய ஆவணங்களுடன் குறித்த நேரத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுபாஷினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியர்களுக்கு நேர்காணல் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article