கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

13 hours ago 1

நெல்லை,

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுதலைவரான கலெக்டர் சுகுமார் தலைமையில் போர் சூழல் ஒத்திகை நடக்கிறது. அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதேபோல சென்னையில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஒத்திகையில், இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய விமானப்படை, தமிழக போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை, எண்ணெய் கையகப்படுத்தும் அமைப்புகள், சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைமுக பணியாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் 

Read Entire Article