குளிர்பான கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

3 days ago 3

தொண்டி, மார்ச் 29: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலை ஒரங்களில் குளிர்பான கடைகள் அதிகமாக உள்ளது. இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகரித்துள்ளது. குளிர்பானங்களை விரும்பி மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தற்போது சாலை ஒரங்களில் சர்பத் கடை, பழ ஜூஸ் கடைகள் அதிகமாக உள்ளது. இவ்வாறு உள்ள பெரும்பாலான கடைகளில் சுகாதாரமற்ற குடிநீரையே பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. வெயில் காலங்களில் அதிகமாக நோய் பரவும் என்பதால், அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, சாலை ஒரங்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் உள்ள கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post குளிர்பான கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article