சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இலை மீது தாமரை குளத்தில் மலரும் அதுபோல ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்போதுதான் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும் என அவர் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சால் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியை அறிவித்தபோதே 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறினார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என மறுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார்.
The post ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.