
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிரேசிலா காஸ்டெல்லானோஸ் (வயது 37). இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது 7 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே சிறுமியின் அலறல் சத்தம் கேட்பதாக அண்டை வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு குளியல் தொட்டியில் மூழ்கி சிறுமி சடலமாக கிடந்தாள்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேசிலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சிறுமியை குளியல் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்றது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.