குளியல் அறை ஜன்னல் வழியாக தாய், மகளை ஆபாச வீடியோ எடுத்த எலெக்ட்ரீசியன் கைது

9 hours ago 3

சென்னசந்திரா,

பெங்களூரு காடுகோடி சென்னசந்திரா பகுதியில் ஒரு தம்பதி, தங்களது மகளுடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி காலை அந்த சிறுமி வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளார். அதையடுத்து அவளது தாய் குளித்துள்ளார். அவர்கள் 2 பேரும் குளித்ததை வாலிபர் ஒருவர் குளியல் அறை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமி இதுபற்றி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் ஓடி வந்து வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து காடுகோடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சென்னசந்திராவை சேர்ந்த காஜா மொய்னுதீன்(வயது 28) என்பது தெரியவந்தது. எலெக்ட்ரீசியனான அவர் பல பெண்களை இதுபோல் ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்த செல்போனை பறித்த போலீசார், வீடியோக்களை அழித்தனர்.

பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். 

Read Entire Article